விநாயகர் விழாவும் இந்து மதத்தின் அவல நிலையும்
இந்த வலைப் பக்கத்தின் ஆசிரியர் என்ற முறையில் வினாயகர் விழாவை
ப் பற்றி எழுத உனக்கென்ன தகுதி என்று மற்றவர் கேட்கும் முன்னர் நானே
சொல்லிவிடுகிறேன் .
இந்துக்களுக்கு மிக முக்கியமான விநாயகர் சதுர்த்தி விழாவை
ஒரு மக்கள் விழாவாக மாற்றிய திலகர் பிறந்த புனேயில்
ஒரு கால் நுற்றாண்டு காலமாக வசித்து வருகிறேன். விநாயகக்
கடவுள் மீது அன்பும் பக்தியும் கொண்டு அவரை வழிபட்டு வருகிறேன்.
நான் நாத்திகனும் அல்லன் புரட்சியாள னும் அல்லன்.
விநாயகர் வழிபாடு என்ற பெயரில் மராட்டியர் இன்று செய்து வரும்
செயல்களைக் கண்டு மனம் வெம்புகின்ற அதே நேரத்தில் என்னவோ இது
வரை நம் முன்னவர் பிள்ளையாரையே அறியாதவர் போலவும் தாங்கள்
தான் அவரை க்கண்டு பிடித்தவர்கள் போல நமது தமிழர்களும் செய்து வரும்
செயல்களை என்னென்று சொல்வது ?
விநாயகர் வழிபாடு என்பது வாலண்டைன்ஸ் தினம் அல்ல. ஒரு மதம்
சார்ந்த விஷயம். அகத்தியர் முதல் அவ்வையார் வரை சங்கரர்
முதல் அருணகிரியார் வரை முறைப்படி பின்பற்றிய ஒரு வழிபாடு.
என்ற பெருமை அதற்கு உண்டு. இந்த அளவு சிலை இருக்க வேண்டும்,
இந்த வடிவம் பூசைக்கு உகந்தது என்று பண்டைய காலத்து ஸ்தபதிகள்
பார்த்து பார்த்து வடிக்கப்பட்ட தெய்வீக சிலைகள் . அந்த மூர்த்திகளை பார்த்து
பக்திப் பரவசத்துடன் பெரியவர்கள் பாடிய திருப்பாடல்கள்.
இவையனைத்தையும் தூக்கி எறிந்து விட்டு ஒரு கூட்டம் இன்று தலை
விரித்தாடுகிறது. ஏதோ கையில் பூ மாலை என்பது போல.
விநாயகர் உருவம் அதன் இஷ்டத்துக்கு வடிவமைக்கப்படுகிறது .
ஒரு சிலைக்கு நான்கு கைகள் இன்னொன்றுக்கு எட்டு . எங்கள் புனேயில்
கணபதி சூலம் வைத்து கொண்டிருப்பார் சில சமயம் வாள் வைத்திருப்பார்.
தொ ப்பி கூ டப் போட்டிருப்பார். கூலிங் கிளாஸ் போட்ட கணபதியும் உண்டு.
இதென்ன அக்கிரமம் என்று ஒருவரும் கேட்பதில்லை.
விநாயகர் என்ன கார்ட் டூன் பாத்திரமா உங்கள் இஷ்டத்துக்கு வடிவமைக்க?
என்று ஒரு மத குருவும் கேட்பதில்லை.
மாறாக இந்த மாதிரி முறை தவறி செய்வது தான் பக்தி என்று பேசி விட்டு கை
தட்டல் வாங்கி க் கொண்டு போய் விடுகிறார்கள்.
உருவம் அபத்தம் என்றால் பூசை முறையோ அனர்த்தம்.
இந்து மதத் தை பொறுத்தவரை வழிபாட்டு நேரம் ,
பிரசாதம் படைக்கும் நேரம் என்பவை வரையறுக்கப் பட்டிருக்கின்றன.
ஆனால் இவர்கள் நடத்தும் நவீன பக்தி செங்கோலோச்சும்
கணபதி விழாப்பந்தல்களில் இரவு 9 ம ணிக்கும் ஆரத்தி எடுக்கலாம்
கணபதி விழாப்பந்தல்களில் இரவு 9 ம ணிக்கும் ஆரத்தி எடுக்கலாம்
என்பது இவர்கள் ஏற்படுத்திய புது முறை. அது மட்டும் அல்ல. வழிபாட்டு
மேடையின் அருகே ஆபாச சினிமா நடனங்கள் அரங்கேறுவதையும்
நாம் பார்த்து ரசிக்க வேண்டும், அல்லது சகித்துக்கொள்ள வேண்டும்.
நேற்று எங்கள் ஊரில் விசர்ஜன் அல்லது சிலை கரைப்பு தினம்.
வசதி இல்லாதவர் கூ ட வணங்கும் கடவுள் விநாயகர்.
அதன் படி மண்ணால் செய்து வழிபட்ட பின் ஆற்றில் கரைத்து விடலாம்
என்ற முறை காலம் காலமாக அனைவரும் பின் பற்றும் ஒன்று.
ஆனால் அதற்கு ஒரு ஊர்வலம். காதை செவிடாக்கும் ஒலி பெருக்கிகள்
விநாயகர் முன்னர் காரில் ஏ சி போட்டு கொண்டு வலம் வரும்
தலைவர்கள். விநாயகர் சிலை முன்னர் பஞ்சாபி பாடல் களுக்கு
அசிங்கமான அபிநயம் பிடித்து ஆடி வரும் குடும்பப் பெண்கள்.
இரவு முழுவதும் கும்மாளம். ஊர்வலம் போகும் வழியெல்லாம் வெட்டி
சாய்க்கப்படும் மரங்கள். சத்தத்தினால் வருந்தும் நோயாளிகள் .
முதியவர்கள் . சிசுக்கள் . பேதமையினும் பேதமை.
இது தான் இந்து மதமா ? இதைத்தான் அது கற்றுக் கொடு த்ததா ?
இதை ஏன் தவறு என்று ஒரு இந்து மதத் தலைவர் கூட சொல்வதில்லை ?
பகவத் கீ தையில் கிருஷ்ணன் சொன்னான் . "டம்பத்துக்காக செ ய்யும் எந்த
ஒரு வேள்வியையும் நான் ஏற்பதில்லை "(16 அத்தியாயம் 17 ம் சுலோகம் ).
"டம்பம் மிகுந்த அவர்கள் எ ன்னை ப் பகைக்கிறார்கள்" என்றே சொல்கிறான்.
பூசை என்ற பெயரில் டம்பமும் விரசமும் உள்ள இடத்துக்கு எந்த இறைவன்
வருவான் ? அன்பும் அர்ப்பணிப்பும் இல்லாமல் இந்து மதம் வளருமா ?
இறையன்பு சிறிதும் இல்லாமல், சமூகத்தில் தலைமைப்
வருவான் ? அன்பும் அர்ப்பணிப்பும் இல்லாமல் இந்து மதம் வளருமா ?
இறையன்பு சிறிதும் இல்லாமல், சமூகத்தில் தலைமைப்
பொறுப்பேற்கத் துடிக்கும் ஒரு கூ ட்டம் விநாயகர் விழாவை த் தனது
கைக்குள் வைத்து க் கொண்டு ஆட்டம் போட்டு க் கொன்டிருக்கிறது.
நாம் பார்த்துகொண்டிருக்கிறோம்.
இது தான் இன்றைய நிலை.
இதை இந்து மதத்தின் அவல நிலை என்று சொல்லாமல் என்ன சொல்ல?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக